புதிய பேட்டரி பேக்  உற்பத்தி  ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்

by Admin / 12-03-2026 08:49:33am
புதிய பேட்டரி பேக்  உற்பத்தி  ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல்

காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கத்தில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய பேட்டரி பேக்  உற்பத்தி  ஆலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்த ஆலை  சுமார் ₹500 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது.  இதன் மூலம் சுமார் 200  நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த செப்டம்பர் 2025-இல்  முதலமைச்சரின் லண்டன் பயணத்தின் போது இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே சமயம், முதலமைச்சர்  வட சென்னை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு புதிய நலத்திட்டங்களையும் தொடங்கி வைத்தார். 

 

Tags :

Share via