தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட அனைத்து தாய் கிராமங்களிலும் 2681 சிசிடிவி கேமராக்கள். 

by Editor / 11-01-2023 09:05:05pm
தமிழகத்தில் முதன்முறையாக திருநெல்வேலி மாவட்ட அனைத்து தாய் கிராமங்களிலும் 2681 சிசிடிவி கேமராக்கள். 

 திருநெல்வேலி மாவட்டத்தில் 272 தாய் கிராமங்களும் 960 குக்கிராமங்களும் உள்ளது. மாவட்டத்திற்குட்பட்ட காவல் சரகங்களில் குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 
இதன்படி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை  கண்காணிக்கும் வகையில் அந்தந்த காவல் நிலையங்களில் உள்ள தாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் காவல்துறை ஏற்பாட்டில்   மாவட்டத்தில் 272 தாய்கிராமங்களில் இதுவரை 1343 சி.சி.டி.வி கேமராக்களும், குக்கிராமங்களில் 1338 சி.சி.டி.வி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்படி கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்ற வழக்குகளில் ஈடுபட்ட நபர்கள் கண்டுபிடிக்க பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சென்ற ஆண்டு, மாவட்டத்தில்  குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.  மேலும் 10.01.2023 ம் தேதி கூடங்குளம் காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட கூத்தன்கூழி கிராமத்தில் உள்ள முக்கிய பகுதியில் 29 CCTV கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் அனைத்து தாய் கிராமங்கள் மற்றும் குக்கிராமங்கள் உட்பட 2681 CCTV கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்படத்தக்கது.

 

Tags :

Share via