திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

by Staff / 29-09-2023 04:31:56pm
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு காணொலிக்காட்சி வாயிலாக கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனை கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via