இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கொடூரம்

மேற்கு வங்க மாநிலத்தில் கல்லூரி மாணவியை கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டம் மந்திர் பஜார் பகுதியில் உள்ள வங்கிக்கு சென்ற கல்லூரி மாணவியை இரண்டு ஆசாமிகள் கடத்தி வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், அந்த பெண்ணை நிர்வாணமாக தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
Tags :