ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிஅலி லாரி ஜானி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக அறிவிப்பு
ஈரானின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதிகாலை நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அவர் "ஒழிக்கப்பட்டதாக" இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஈரானின் 'பாசிஜ் துணை ராணுவப் படையின் தளபதி. இவரும் இதே தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.
பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, லாரிஜானியின் மரணம் ஈரானுக்கு ஏற்பட்ட இரண்டாவது பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேலின் இந்தக் கூற்றுகளை ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
அணுசக்தி கொள்கை மற்றும் ராஜதந்திர உறவுகளில் முக்கியப் பங்காற்றிய லாரிஜானியின் இழப்பு, ஈரானின் தற்போதைய ஆட்சி முறைக்கு பெரும் பின்னடைவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானின் புதிய உச்ச தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மொஜ்தபா கமேனி மீதும் இஸ்ரேல் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருகிறது
Tags :



















