இலங்கையில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள்கள்-புதன்கிழமை பொது விடுமுறை

by Admin / 18-03-2026 12:27:26am
இலங்கையில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள்கள்-புதன்கிழமை பொது விடுமுறை

இலங்கையில் நிலவும் கடும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றிலிருந்து அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை நாள்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கு பதில் புதனை தேர்ந்தெடுத்ததன் மூலம் அரசு அலுவலகங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மூடப்படுவதை தவிர்க்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 இந்த உத்தரவு அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ,கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் பொருந்தும் . மத்திய கிழக்கு நிலவும் போர் பதற்றம்  மற்றும் ஹார்மோஸ் ஜல சந்தி மூடப்பட்டதால் உலகளாவிய எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.   எரிபொருளை சேமிக்க வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையையும் ஊக்கப்படுத்தப்படுவதாக  அறிவித்துள்ளது 

தேசிய எரிபொருள் அட்டை மூலம் பெட்ரோல் ,டீசல் விநியோகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

 

Tags :

Share via

More stories

Logo