ஏர் இந்தியா விபத்தில் 144 பேரின் டிஎன்ஏ முடிவுகள் உறுதி

ஏர் இந்தியா விபத்தைத் தொடர்ந்து நடந்து வரும் டிஎன்ஏ சோதனை முடிவுகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி வெளியிட்டுள்ளார்.
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, உயிரிழந்தவர்களில் 144 பேரின் டிஎன்ஏ மாதிரிகள் பொருந்தியுள்ளன. மீதமுள்ள உடல்களின் மாதிரிகளை கொண்டு சோதனை தொடர்கிறது. கடந்த 12ஆம் தேதி பிற்பகல் அகமதாபாத்தில் இருந்து 244 பேர், 232 பயணிகள் மற்றும் 12 பணியாளர்களுடன் லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் வெடித்து விபத்துக்குள்ளானது.
Tags :