கட்டுக்கட்டாக சாலையில் சிதறிய 7 கோடி ரூபாய்

by Staff / 11-05-2024 11:51:06am
கட்டுக்கட்டாக சாலையில் சிதறிய 7 கோடி ரூபாய்

ஆந்திரப் பிரதேச மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்லா அருகே இன்று சாலையில் சென்றுகொண்டிருந்த மினி லாரி மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மினி லாரி கவிழ்ந்தது. இந்த நிலையில் அதில் இருந்து கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 7 கோடி ரூபாய் பணம், சாலையில் சிதறியன. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் பணத்தை கைப்பற்றி, ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via