ராஜஸ்தான் ராயல்ஸ் அணிஎட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி

ராஜஸ்தான் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் குஜராத் ஐட்டம்ஸ் அணியும் மோதின.. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கி ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 209 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 புள்ளி அஞ்சு ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. 14 வயதுடைய வைபவ்சூரிய வன்சி என்கிற வீரர்நம்பிக்கை நட்சத்திரமாக களத்தில் 38 பந்துகளில் 101 ரகளை எடுத்து மிகப்பெரிய சாதனையை எடுத்து இந்திய கிரிக்கெட் உலகத்திற்கு தன்னை வெளிச்சப்படுத்திக் கொண்டுள்ளார்.

Tags :