நயினார் நாகேந்திரனிடம் 1 மணி நேரம் விசாரணை
கடந்த 2024இல் நடந்த மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சி.ராபர்ட் புரூஸ் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நேரில் ஆஜரான நயினார் நாகேந்திரனிடம் ஒரு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மீண்டும் ஜூலை 2இல் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டது.
Tags :



















