அரசு ஊழியர்களின் 23 ஆண்டுகள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம்-. தமிழக முதலமைச்சர்-மு.க.ஸ்டாலின்
இன்று இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் கடந்த தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வருவீர்கள் என்று சொன்னீர்கள். ஆனால், இப்பொழுது புதிய உறுதிப்படுத்தப்பட்ட உறுதி திட்டம் என்று ஒன்றை அறிவிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு, நாங்கள் கடந்த 23 ஆண்டுகள் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறோம். உங்கள் ஆட்சியைப் போன்று அரசு ஊழியர்கள் மீது எஸ்மா, டெஸ்மா போடவில்லை /நாங்கள் கொண்டுவந்துள்ள புதிய உறுதிப்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்கள் வரவேற்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் அறையில் வந்து இனிப்புகளை ஊ ட்டிவிட்டு மகிழ்வோடு சென்று இருக்கிறார்கள். இன்னும் பகுதிநேர ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அங்கங்காவடி- சத்துணவு ஊழியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களோடும் அமைச்சர் பேசிக்கொண்டு இருக்கிறார் .அவர்கள் பிரச்சனையை, நாங்கள் விரைவில் தீர்ப்போம் என்று குறிப்பிட்டதோடு, நூறு நாள் வேலை திட்டம் குறித்து நாளை சட்டப்பேரவையில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.,
Tags :


















