துர்நாற்றத்தோடு, சுகாதாரம் இல்லாத அரசு உயர்நிலைபள்ளி

by Editor / 11-12-2021 02:53:30pm
 துர்நாற்றத்தோடு, சுகாதாரம் இல்லாத அரசு உயர்நிலைபள்ளி


தேனி மாவட்டம்,ஆண்டிபட்டி தாலுகா,மொட்டனூத்து ஊராட்சியில் அங்கம் வகிக்கக்கூடிய ஆசாரிப்பட்டி கிராமத்தில் அரசு(6-10)அரசு உயர்நிலைப் பள்ளி அருகே கழிப்பிடகழிவு நீர் குளம் போலதேங்கி சுகாதாரசீர்கேடு, நோய்த்தொற்று பரவும் அபாயமுள்ளதாக  பெற்றோர்கள் குமுறலை தெரிவிக்கின்றனர்.

இவ் அரசு பள்ளியில் சுற்றுவட்டார கிராம சாமானிய ஏழை வீட்டு மாணவர்கள் சுமார் 250 ற்கும் அதிகமானோர் கல்வி பயின்று  வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி வளாகத்தை ஒட்டி பெண்கள் கழிப்பறை உள்ளது. இக்கழிப்பறையில் செப்டிங் டேங்க்கானது நிரம்பி வழிந்தோடுவதை மொட்டனூத்து ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பல மாதங்களாக கண்டு(ம்) கொள்ளாத அலட்சியத்தின் பலனாக கழிப்பறை கழிவு நீரானது துர்நாற்றத்துடன் பொதுவெளியில் வெளியேறி சுகாதார சீர்க்கேட்டினை உண்டாக்கி ஆசாரிபட்டிபகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாகவும்,

இவ்வாறாக வெளியேறும் கழிவு நீரானது குளம் போல  தேக்கமடைந்து மூச்சை அடைக்கும் துர்நாற்றம் காற்றில் கலந்து கொடூரமான கொசுக்கள் உற்பத்தி ஆவதோடு,ஒரு புது வித நோய்த் தொற்று பரவும் அபாய சூழலும் பள்ளி வளாகத்தில் காணப்பட்டு வருவதாகவும்,

இது மாதிரியான அவலத்தால் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள்,அப்பகுதி வாழ்பொது மக்கள்,குறிப்பாக அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி எனும் கனவோடு  பயிலும் 250 மாணவர்களும் வீரியமிக்க கொசுக்கடி,நோய்த்தொற்று, அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக வேதனைத்தெரிவித்து வருகின்றனர்.
 

 

Tags :

Share via