வெறும் 8 ரூபாய்க்கு நிலம் விற்பனை! குவிந்த மக்கள்

by Staff / 03-07-2024 01:45:07pm
வெறும் 8 ரூபாய்க்கு நிலம் விற்பனை! குவிந்த மக்கள்

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இருந்து தென்மேற்கு திசையில் 200 மைல் தொலைவில் இருக்கிறது Gotene என்ற நகரம். இங்கு 29 பிளாட் நிலம் தலா வெறும் 1 குரோனாவுக்கு விற்பனைக்கு வருகிறது. ஒரு குரோனா என்பது இந்திய ரூபாய் மதிப்பில் 7.84 ரூபாய். அதாவது 8 ரூபாயை விட குறைவு. மக்கள் நிலத்தை போட்டி போட்டு வாங்கினார்கள்.Gotene மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மக்கள் தொகை குறைந்துகொண்டே வருவதோடு பொருளாதார ரீதியாகவும் நலிவடைந்து வருகிறது. எனவே, வீடு விற்பனைக்கு உத்வேகம் கொடுப்பதற்காக குறைந்த விலைக்கு நிலம் விற்பனை செய்யப்பட்டது.

 

Tags :

Share via