ரயில் சேவைகளில் மாற்றம்

by Editor / 28-04-2023 09:20:26am
ரயில் சேவைகளில் மாற்றம்

போத்தனூர் ரயில் நிலையத்தில் உள்ள ஒரு பாலத்தின் இரும்பு கர்டர்களை மாற்றும் பணிகள் நடப்பதால்  28.04.2023 & 30.04.2023 ஆகிய இரு நாட்களில் மட்டும் கீழே விவரிக்கப்பட்டுள்ளபடி ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

 மதியம் 12:15 மணிக்கு கோயம்புத்தூர் சென்றடையும் மதுரை - கோயம்புத்தூர் ரயில் (ரயில் எண்.16722)  28.04.2023 & 30.04.2023 ஆகிய இரு நாட்களில் மட்டும் மதுரையில் இருந்து போத்தனூர் வரை மட்டுமே இயக்கப்படும். போத்தனூர் - கோயம்புத்தூர் இடையே ஏப்ரல் 28 மற்றும் 30 ஆகிய 2 நாட்கள் மட்டும் இயக்கப்படாது. 

கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து 14.40 மணிக்குப் புறப்படும் கோயம்புத்தூர் மதுரை ரயில் (வண்டி எண்: 16721)  28.04.2023 & 30.04.2023 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூருக்கு பதிலாக போத்தனூரில் இருந்து 14.52 மணிக்குப் புறப்படும். ஏப்ரல் 28 மற்றும் 30 ஆகிய இரு நாட்களில் மட்டும் கோயம்புத்தூர்  - போத்தனூர் இடையே ரயில் இயக்கப்படாது.

 

Tags :

Share via