தமிழக விவசாயிகளுக்கு புதிய நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - மு. க. ஸ்டாலின்

by Admin / 24-07-2026 02:02:17am
தமிழக விவசாயிகளுக்கு புதிய நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் - மு. க. ஸ்டாலின்

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு. க. ஸ்டாலின் கர்நாடக அரசு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட மறுப்பது குறித்தும் மேகதாது அணை கட்ட முயற்சிப்பது குறித்தும் தமிழக அரசிடம் இருந்து முறையான எதிர்ப்போ உறுதியான நடவடிக்கையோ இல்லாதது அதிர்ச்சி அளிப்பதாகவும் காவிரி நீர் உரிமையை பெறவும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும் முதலமைச்சர் ஏன்? உரிய அழுத்தத்தை தராமல் மௌனம் காக்கிறார்?என்றும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் சென்று அதை ஏன் பிரதமரிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் கேள்விஎழுப்பியுள்ளதோடு கர்நாடக அரசு தொடர்ந்து தமிழகத்தின் பங்கை தர மறுக்கும் போது தமிழக நீர்வளத்துறை அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்றும் காவேரி மேலாண்மை ஆணையும் ஒழுங்காற்று குழுவும் தமிழகத்தின் கோரிக்கைகளை தள்ளிப்போடும் நிலையில்... உச்சநீதிமன்றத்தை உடனடியாக தமிழக அரசு ஏன் அணுகவில்லை என்றும் ஜூலை 19 வரை தமிழகத்திற்கு வரவேண்டிய 28.3 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா திறந்து விட்ட நீரோ 3.4 டிஎம்சி இதன் காரணமாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்படாமல் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் குறுவை சாகுபடி இழந்து தவிக்கும் தமிழக விவசாயிகளுக்கு புதிய நிவாரணத் தொகுப்பை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via
Logo