தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று உள்ளதா ?எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

by Admin / 24-07-2026 02:08:57am
தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று உள்ளதா ?எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் சட்டவிரோத விற்பனை செய்ததாக அருணாச்சலம் என்ற இளைஞர் ஜூலை 17ஆம் தேதி தென்பாகம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அன்று மாலை பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் என்று இறந்துள்ளார் அவர் இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் இருந்தபோது போலீசார் தன்னை தாக்கியதாகவும் தெரிவித்துள்ள வீடியோ பெரும் அதிர்ச்சி அலையை உருவாக்கி உள்ளது. இந்தக் குற்றச்சாட்டை காவல்துறையினர் மறுத்துள்ளனர். காவல்துறை லாக்கப்பில் இருக்கும் போது திடீரென மயங்கி விழுந்ததாகவும் சிசிடிவி காட்சிகளின் படி இது லாக்கப் மரண அல்ல என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் மரணங்கள் நிகழும் போது அதற்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் கடும் நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பதால் இத்தகைய துயரங்கள் தொடர்கதை ஆகின்றன என்று தன் எக்ஸ் வலைதளப் பதிவில் பதிவிட்டுள்ளார். அத்துடன் சினிமாவை பார்த்துவிட்டு கண்ணீர் வடிக்கும் ஆட்சியாளர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்றும் கேட்டுள்ளார். நாகர்கோவில் மாற்றுத்திறனாளி சபரி வர்மன் சிறையில் இறந்ததை தொடர்ந்து தற்போது தூத்துக்குடியிலும் காவல் சித்திரவதியால் மரணம் ஏற்பட்டுள்ளது வேதனை அளிப்பதாகவும் முதலமைச்சர்- அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால் தமிழ்நாட்டில் அரசு என்று ஒன்று உள்ளதா என்றும் அவர் காட்டமாக விமர்சனத்தை வைத்துள்ளார். அருணாசலத்தின் மரணம் என்பது தற்செயலாக நிகழ்ந்தது என்று ஏற்க முடியாது என்றும் இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் புதிய ஆட்சி பொறுப்பு ஏற்று சில வாரங்களிலே அடுத்தடுத்து நான்கு காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதை தமிழக பாஜக சுட்டிக்காட்டி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்ததாகவும் ஆளுங்கட்சிக்கு எதிராக கருத்தை முன் வைத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo