தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது

by Staff / 23-10-2023 04:45:59pm
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் கைது

கோவை மாவட்டம் ரத்தினபுரி சம்பத் தெருவை சேர்ந்தவர் 31 வயதான நியாஷ். நெய் வியாபாரி. இவரது மனைவியின் உறவினர் 46 வயதான நாகராஜ்.நேற்று நாகராஜ் குடிபோதையில் நியாசின் வீட்டுக்கு வந்ததால் நியாஷ் கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் நாகராஜ் அங்கிருந்து சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து தனது நண்பர் ராமகிருஷ்ணனை அழைத்துகொண்டு மீண்டும் அங்கு வந்துள்ளார்.அப்போது இருதரப்பிலும் மோதல் ஏற்பட்டு 2 பேரும் சேர்ந்து உருட்டுக்கட்டையால் நியாசை தாக்கினர். தடுக்க முயன்ற நியாசின் மனைவியையும் தாக்கினர். இதனால் தம்பதியர் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜ் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகிய 2 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via

More stories