தமிழ்நாடா? போதைப் பொருள் விற்பனை கிடங்கா?: முன்னாள் முதல்வர்

by Staff / 02-03-2024 12:12:04pm
தமிழ்நாடா? போதைப் பொருள் விற்பனை கிடங்கா?: முன்னாள் முதல்வர்

தமிழ்நாடா? போதைப் பொருள் விற்பனை கிடங்கா? என முன்னாள் முதல்வர் பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.நாம் வாழ்வது தமிழ்நாடா? அல்லது போதைப்பொருள் மொத்த விற்பனைக் கிடங்கா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் போதைப் பொருளை அறவே ஒழிக்கும் வரை நாங்கள் விடுவதாக இல்லை என X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், தொடர் நடவடிக்கைகள் மூலம் போதைப் பொருள் புழக்கத்தை ஒழிக்கவும், போதைப் பொருள் இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் வேண்டும் என முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via

More stories