மலைப் பகுதியில் வனப் பொங்கல் வைக்கச் சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு..
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் கடம்பூர் அடுத்த காடட்டி வன கிராமத்தைச் சேர்ந்த 12 பேர் வனப் பொங்கல் வைக்க வனப்பகுதிக்கு சென்ற போது வனப்பகுதியில் இருந்து வெளியேறி எதிரே வந்த யானை தாக்கியதில் மாதேவப்பா என்பவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். மற்றவர்கள் தப்பி ஓடினர். சம்பவம் குறித்து கடம்பூர் வனத்துறையினர்,போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags : மலைப் பகுதியில் வனப் பொங்கல் வைக்கச் சென்றவர் யானை தாக்கி உயிரிழப்பு..