அழகர்கோவில் பகுதியில் அடையாளம் தெரியாத சடலம்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் பேருந்து நிலைய பகுதியில் சுமார் 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் நபர் உயிரிழந்து கிடப்பதாக அ. வலையபட்டி கிராம நிர்வாக அலுவலர் அப்பன் திருப்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் உயிரிழந்த நபர் யார் என்பன குறித்தும் போலீசார் இன்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :