பாஜக கூட்டணியின் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்-திருமாவளவன்.

by Staff / 04-09-2025 10:58:57am
பாஜக கூட்டணியின் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்-திருமாவளவன்.

சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (செப்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துக்கள். பாஜக கூட்டணியின் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள் என கூறியது நடக்கிறது. டிடிவி தினகரனின் முடிவு அவரது எதிர்காலத்திற்கு நல்லது என நான் நம்புகிறேன்” என்றார். 

 

Tags : பாஜக கூட்டணியின் இருந்து ஒவ்வொருவராக வெளியேறுவார்கள்-திருமாவளவன்.

Share via