விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது

by Admin / 19-03-2026 06:48:55pm
 விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது

இன்று தூத்துக்குடி விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரனை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் . பிணையில் இருக்கையில் இது போன்ற கொடூர சம்பவத்தை அவர் அரங்கேற்றி உள்ளார். உண்மை குற்றவாளிகளை பிடிக்கும் நோக்கில் 400க்கு மேற்பட்டர்களிடம்விசாரணை நடத்தி அறிவியல் பூர்வமான உரிய ஆதாரங்களை திரட்டிய பின்னரே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிக்கு ஆதரவாக எந்த பிண்ணனியோ அழுத்தமோ கிடையாது என்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1500க்கு மேற்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் வேலைக்குச் செல்லும் பெண்களை பாதுகாக்கும் இதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதோடு அனைத்து கிராமங்களிலும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தும் பணியையும் மேற்கொள்ள இருப்பதாகவும் மாணவியின் பெயர் ,அங்க அடையாளங்க வெளியிடக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றவாளியை பிடிப்பதற்காக 150 க்கு மேற்பட்ட காவலர்கள் உதவி ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு தீவிரமாக விசாரித்த பிறகே உண்மையான குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் மதன் தெரிவித்தார்.

 விளாத்திகுளம் மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி கைது
 

Tags :

Share via