பாட்டாளி மக்கள் கட்சி கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு நாட்கள் விழிப்புணர்வு நடைபயணம்
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூலை 1 முதல் ஜூலை நான்கு வரை நான்கு நாட்கள் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.மேகதாது அணைத்திட்டத்தால் தமிழகத்திற்கு ஏற்படக்கூடிய தீங்கு குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு இந் நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளார்.. காவேரி ஆறு தமிழக நுழைவாயிலான பிழி குண்டு முதல் பூம்புகார் வரை இந்த விழிப்புணர்வு நடைபயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடை பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக விவசாயிகளை திரட்டி பிரச்சாரம் மேற்கொள்ளவும் பாமக முடிவு செய்துள்ளது. கர்நாடக அரசு அணை கட்டினால் டென்த் ஆப் பகுதிகள் வறட்சியாக மாறும் அபாயம் உருவாகும் என்பதோடு 5 கோடி மக்களின் குடிநீர் மற்றும் விவசாயமும் பாதிக்கப்படும் என்பதை தெளிவுபடுத்தி மக்களை விழிப்புணர்வு அடைய வைத்து மேகதாழ் விவகாரத்தில் மத்திய அரசின் காவிரி நதிநீர் ஆணையத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக நடை பயணத்தை வடிவமைத்துள்ளனர். மேகதாது விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் அமைக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Tags :



















