தமிழ்நாட்டில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணத்தை இரு மடங்காக உயர்வு
தமிழ்நாட்டில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்கான சிறப்பு கட்டணத்தை இரு மடங்காக தமிழ்நாடு அரசு உயர்த்தி அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் இயங்கி வரும் தனியார் மதுபான பார்களுடன்கூடிய மனமகிழ் மன்றங்கள் விண்ணப்ப கட்டணமாக பத்தாயிரம் ரூபாயும் உரிமை கட்டணமாக 30 ஆயிரம் ஆகும். மாநிலம் முழுவதும் இயங்கும் மனமகிழ்மன்றங்களுக்கு கட்டணம் சென்னை மற்றும் பெருநகரப் பகுதிகளில் இயங்கி வரும் மனமகிழ்மன்றங்கள் 15 லட்சமாக இருந்த சிறப்பு கட்டணம் தற்போது 30 லட்சம் ஆகும் .10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிகளில் சிறப்பு கட்டணம் ரூபாய் 25 லட்சம் எனவும் கட்டணம் அறிவிக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்டமாநகராட்சிகளில் சிறப்பு கட்டணம் 20 லட்சம் ஆகவும் நகராட்சி பகுதிகளில் சிறப்பு கட்டிடம் 15 லட்சம் ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Tags :


















