இன்று தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள்மாநாடு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இன்று தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் டிஐஜி கல் ஐஜிக்குள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் மாநாடு தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல்துறை உதய அதிகாரிகள் அரசு செயலர்கள் உடன் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், சட்டம் ஒழுங்கு- பொது அமைதி- பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, போதை இல்லா தமிழ்நாடு, திட்ட செயல்பாடு, அரசு துறைகளில் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துச் செல்வது குறித்தும் விவாதிக்க பட உள்ளது. இரண்டாம் நாளில் ,வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் தமிழ்நாடு பசுமை திட்டம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ,காலநிலை மாற்றம் ,வனப்பகுதிகளில் சாலை மேம்பாடு, வன உரிமைச் சட்டம் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான மோதலை தடுக்கும் பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















