இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் முறையிடதிரிணமூல்முறையிட திட்டம்

by Editor / 26-08-2021 12:43:24pm
இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையத்திடம் முறையிடதிரிணமூல்முறையிட திட்டம்

நடைபெற உள்ள இடைத்தேர்தலை  மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படுவது குறித்து தேர்தல் ஆணையம் கட்சிகளின் கருத்தைக் கேட்டிருந்தது. இந்த நிலையில் இடைத்தேர்தல்களை முடிந்தளவு முன்கூட்டியே நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ் முறையிடவுள்ளது. 

தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்கும் திரிணமூல் காங்கிரஸ் குழுவில் மஹுவா மொய்த்ரா உள்ளிட்ட 5 எம்.பி.க்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும், தேர்தல் நடத்துவது குறித்து ஆணையம் கருத்து கேட்டதற்கான எழுத்துப்பூர்வ பதிலையும் இவர்கள் சமர்ப்பிக்கவுள்ளனர்.

முன்னதாக, மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 213 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது.

 

Tags :

Share via