வங்கதேசம் பயணிக்க வேண்டாம் - கனிமொழி

by Editor / 05-08-2024 02:44:14pm
வங்கதேசம் பயணிக்க வேண்டாம் - கனிமொழி

மறு அறிவிப்பு வரும் வரை இந்திய மக்கள் யாரும் வங்கதேசம் பயணிக்க வேண்டாம் என திமுக எம்பி கனிமொழி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ தள பக்கத்தில், "வங்கதேசத்தில் நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக அந்நாட்டு அரசு டாக்கா உள்ளிட்ட‌ முக்கிய நகரங்களில் பொதுமுடக்கத்தை அறிவித்துள்ளது. எனவே இந்தியர்கள் வங்கதேசத்திற்கு பயணிக்க வேண்டாம். டாக்காவில் உள்ள மக்கள் இந்திய தூதரகத்தை +8801958383679, +8801958383680 +8801937400591 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்" என பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via