மணிப்பூர் விவகாரம்:விசிக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

by Editor / 22-07-2023 10:40:36pm
மணிப்பூர் விவகாரம்:விசிக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

மணிப்பூரில் இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தப்பட்டு அழைத்து சென்ற வீடியோ சமூக வலைதங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பெண்களுக்கு இழைக்கப்பட்ட இந்த கொடூர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மணிப்பூர் விவகாரத்திற்கு கண்டனம் தெரிவித்தும், மணிப்பூர் மாநில முதல்வரை கைது செய்ய வலியுறுத்தியும் விசிக சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. திமுக சார்பில் சென்னையில் வரும் 23ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo