திமுக அரசு எதையும் மறைக்கவில்லை:  அமைச்சர் சேகர் பாபு

by Editor / 29-05-2021 04:39:45pm
திமுக அரசு எதையும் மறைக்கவில்லை:  அமைச்சர் சேகர் பாபு

 


திமுக அரசு வெளிப்படையாகவே செயல்படுவதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, திமுக ஆட்சியில் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுகிறது. எதையும் அரசு மறைக்கவில்லை. கொரோனா இறப்பு எண்ணிக்கையையும் குறைத்துக் காட்ட வில்லை. அதில் அரசியலும் செய்யவில்லை. திருக்கோயில் சொத்துக்கள் உட்பட அனைத்தையும் வெளிப்படையாக காட்டுகிறோம் .
கடந்த ஆட்சியில் 13 சித்த மருத்துவமனைகளே கொண்டுவரப்பட்ட நிலையில் அதிமுக ஆட்சியில் 50 மருத்துவமனைகள் கொண்டுவரப்பட்டதாகவும் சித்த வைத்தியம் கோருவோருக்கு மட்டும் சித்த வைத்திய சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

 

Tags :

Share via

More stories

Logo