மதுராந்தகம் தி.மு.க வேட்பாளர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்தார்.
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ள பரந்தாமன் கோர்ட் ஆட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் தாமு அன்பரசன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் பரந்தாமன் இத்தொகுதியில் ஐந்து மும்முனைப் போட்டி நிலவினாலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என்றும் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் ஆட்சியின் தோல்விகள் திமுகவின் வெற்றிக்கு வழிவகுக்கும்என்றும் தெரிவித்தார்.
Tags :















