விட்டமின் உணவுகள்

by Writer / 12-09-2021 04:52:05pm
விட்டமின்  உணவுகள்

வைட்டமின் டி குறைபாடு காரணமாக எலும்புகள் பலவீனமடைதல், மூட்டு வலி, முதுகு வலி மற்றும் தசை வலி ஆகியவை ஏற்படும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். விட்டமின் டி சத்து மிகவும் குறைந்தால், கீல்வாதம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான நோய்கள் ஏற்படலாம் என எச்சரிக்கின்றனர்.

வைட்டமின் டி குறைபாடு?

 சூரிய ஒளி வைட்டமின் டிக்கான முக்கிய ஆதாரம் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை. ஆனால் சூரிய ஒளியைத் தவிர சிறந்த ஆதாரங்களாகக் கருதப்படும் சில உணவுப் பொருட்கள் உள்ளன.

 குறைபாட்டின் அறிகுறி

உடல்  சோர்வாக இருக்கும் ,முதுகு வலி,ஆறாத காயம்,மன அழுத்தம்,முடி உதிர்தல்

 முட்டைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவற்றில் புரதம், வைட்டமின் டி, கால்சியம் மற்றும் பல வகையான தாதுக்கள் உள்ளன. வைட்டமின் டி குறைபாட்டை நீக்க, முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால், நல்ல பலனை பெறலாம்.குழந்தை பருவத்திலிருந்தே பால் மிகவும் முக்கிய உணவாக கருதப்படுகிறது. ஏனெனில் பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்துள்ளது. வைட்டமின் டி குறைபாட்டைச் சமாளிக்க பால் உதவுகிறது. கீரையில் உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள வைட்டமின் டி குறைபாட்டுடன் பல ஊட்டச்சத்துக்களின் பற்றாக்குறையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

  பன்னீர் வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவாகும்.  எலும்பு  தசைகளை வலுப்படுத்துகிறது. .சோயாபீனில் புரதம், கால்சியம், வைட்டமின் டி, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், இரும்பு, வைட்டமின் பி, துத்தநாகம், ஃபோலேட், செலினியம் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்கிறது.

 

Tags :

Share via