சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்-அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்.

சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க 28.50 கோடி ஒதுக்கீடு.
தூத்துக்குடி, விருதுநகர் தென்காசி, கரூர், அரியலூர் மாவட்டங்களில் கடலை, சூரியகாந்தி, ஆமணக்கு பயிரிடலை அதிகரிக்க 28.50 கோடி ஒதுக்கீடு.சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் துவரை சாகுபடி சிறப்பு மண்டலம் உருவாக்கப்படும்.வேளாண்துறையில் உற்பத்தி முதல் விற்பனை வரை சேவைகளை முழுமையாக மின்னனு முறையில் விவசாயிகள் பெற நடவடிக்கை.
நெல் அறுவடைக்குப்பின் பயிர் சாகுபடியை ஊக்கப்படுத்த ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
விவசாயிகளின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில வேளாண் வளர்ச்சி திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.நடப்பாண்டில் ரூ.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு மையம் மூலம் 30,000 மெட்ரிக் டன் நெல் பயிர் வகைகள், விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.
ரூ.12 கோடி மதிப்பீட்டில் செம்மரம், சந்தனம், தேக்கு போன்ற மரக் கன்றுகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்படும்.பூச்சி நோய் தாக்குதலை கட்டுப்படுத்த 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்ய பயிறு வகைகள், விதைகள் மானியத்தில் வழங்கப்படும்.இத்திட்டம் ரூ.3 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துக்கு ரூ.300 கோடி.7500 ஏக்கரில் இயற்கை வேளாண் சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.ரூ.71 கோடி மதிப்பீட்டில் மாநில வேளாண் வளர்ச்சித் திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும்.குறுவை சாகுபடி திட்டத்தால் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.இளைஞர்கள் வேளாண் தொழில் தொடங்க ரூ.1 லட்சம்.வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.மரம் வளர்ப்புத் திட்டத்துக்கு ரூ.12 கோடி.கிருஷ்ணகரி, திருவண்ணாமலை, தருமபுரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் துவரை உற்பத்தி மண்டலங்கள் அமைக்கப்படும்.விதை மேம்பாட்டு ஆணையம் மூலம் 30 ஆயிரம் மெட்ரிக் டன் விதைகள் வழங்கப்படும்.மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் சிறுதானிய திருவிழா நடத்தப்படும்,
சமையல் எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த சூரியகாந்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும்.
இயற்கை விவசாய முறைகளை ஊக்குவிக்கும் திட்டத்துக்கு ரூ.400 கோடி.
மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ் இலவச தென்னங்கன்று வழங்க ரூ.300 கோடி.
வேளாண் பொருள்களின் விதை முதல் விற்பனை வரை அறிந்துகொள்ள புதிய செயலி அறிமுகப்படுத்தப்படும்.உழவர் சந்தைகள் காலையில் மட்டுமே செயல்படுகின்றன. சிறுதானியங்கள் விற்பனை செய்ய மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை மாலையிலும் செயல்பட அனுமதி வழங்கப்படும்
Tags : Prizes will be given to the best farmers