விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..

by Admin / 15-03-2026 01:56:39pm
விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறதா..

விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையான கூட்டணி குறித்த தகவல்கள் தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வமான தரப்பிலிருந்து இந்த கூட்டணி செய்திகள் வெறும் வதந்திய என திட்டவட்டமாக மறுக்கப்பட்டுள்ளது .பாஜகவை கருத்தியல் ரீதியான எதிரி என்று குறிப்பிட்டு அக்கூட்டணியில் சேர வாய்ப்பே இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், பாஜக தரப்பிலிருந்து விஜய்க்கு துணை முதலமைச்சர் பதவி மற்றும் 80 தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் விஜய் முதலமைச்சர் பதவியை இலக்காக கொண்டுள்ளதால் பேச்சு வார்த்தையில் சிக்கல் இருப்பதாகவும் கூறப்படுகிறது .இதுவரை தமிழக வெற்றிக்கழக தரப்பிலிருந்து  2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். அண்மையில் நடைபெற்ற  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிதி நெருக்கடி மற்றும் தேர்தல் வியூகம் காரணமாக ஒரு சில நிர்வாகிகள் கூட்டணி அமைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்ததாக தெரிகிறது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு முடிவும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விஜயின் கட்சியுடன் எந்த வித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் இது ஊடகங்களின் கற்பனை என்றும் தெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில், விஜயின் தமிழக வெற்றி கழகம் எந்த கூட்டணியிலும் சேராமல் தனித்து இயங்கும் முடிவிலேயே உறுதியாக இருப்பதாக தெரிகிறது. சி பி ஐ யின் விசாரணைக்காக டெல்லி சென்றுள்ள விஜய் அங்கேயே பாஜக தரப்போடு பேச்சுவார்த்தையில் ஈடுபடலாம் என்கிற ஊகங்கள் தான் இதற்கு அடிப்படை காரணமாக சொல்லப்படுகிறது.

 

Tags :

Share via

More stories