கார் உதிரி பாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

by Staff / 14-04-2023 12:55:36pm
கார் உதிரி பாக தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மலைப்பாளையம் பகுதியில் அனுமன் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இந்த தொழிற்சாலையில் கார் உதிரி பாகங்கள் ஆன கார் சீட் மற்றும் மேட் தயாரிக்கும் நிறுவனமாகும் இங்கு திடீரென தொழிற்சாலையில் புகை மூட்டத்துடன் கூடிய தீ மல மல என எரியத் தொடங்கியது உடனடியாக மதுராந்தகம் மேல்மருவத்தூர் அச்சரப்பாக்கம் ஆகிய பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு மூன்று தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கார் உதிரி பாகம் தயாரிக்கும் சீட் மேட் தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் ஆன பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் என்பதால் தீ மளமளவென கொழுந்து விட்டு எரிகிறது. தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.மேலும் அருகில் உள்ள செங்கல்பட்டு உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை முழுமையாக தெரியவில்லை. மின்சார கசிவா அல்லது வேறு ஏதாவது காரணமா என மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

 

Tags :

Share via

More stories

Logo