திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா: வாகனங்களுக்கான கட்டுப்பாடு அறிவிப்பு!

by Staff / 05-07-2025 10:08:53pm
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா: வாகனங்களுக்கான கட்டுப்பாடு அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா இந்த ஆண்டு 07.07.2025ம் தேதி அன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழா முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக வரும் திருவிழாவின் முக்கிய நிகழ்வு நாட்களான 05.07.2025, 06.07.2025 மற்றும் 07.07.2025 ஆகிய மூன்று நாட்கள் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்கள் தவிர,

தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூருக்கும், திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கும், உவரியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக திருச்செந்தூருக்கும், சாத்தான்குளத்தில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூருக்கும் மற்றும் திருச்செந்தூர் வழியாக செல்லும் இலகுரக சரக்கு வாகனங்கள் மற்றும் கனரக சரக்கு வாகனங்களும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. எனவே திருச்செந்தூர் வருவதை தவிர்த்து மாற்று பாதையில் செல்லவும்.

மேலும் திருச்செந்தூர் கோவிலுக்கு வருபவர்களை தவிர்த்து, ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக உவரி மார்க்கமாக கன்னியாகுமரி போன்ற ஊர்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும்,

கன்னியாகுமரி, உவரி, திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) வழியாக தூத்துக்குடி, இராமேஸ்வரம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் தனியார் வாகனங்களும் திசையன்விளை/சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இருந்து பரமன்குறிச்சி வழியாக திருச்செந்தூரை கடந்து செல்லும் வாகனங்களும் திருச்செந்தூர் (கிழக்கு கடற்கரை சாலை) பாதையை தவிர்த்து வேறு மாற்று பாதையில் செல்லவும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : Tiruchendur Murugan Temple immersion ceremony: Vehicle restrictions announced!

Share via