திருச்சியில் தி.மு.க பிரம்மாண்ட மாநில மாநாடு-மார்ச் 8ஆம் தேதி முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு. க .ஸ்டாலின் தலைமையில்...
தமிழக முதலமைச்சரும் தி.மு.க தலைவருமான மு. க .ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் 2026 மார்ச் 8ஆம் தேதி திருச்சியில் பிரம்மாண்ட மாநில மாநாடுநடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஸ்டாலின் தொடரட்டும்; வெல்லட்டும் என்ற வாசகத்தின் முழக்கமாக இந்த மாநாடு நடைபெறும். திருச்சியில் நடைபெற உள்ள இந்த மாநில மாநாட்டில் சுமார் பத்து லட்சம் தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பிப்ரவரி 1 முதல் மார்ச் 8 வரை மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று அரசின் சாதனைகள் விலக்கி பரப்புரை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டதோடு தேர்தலில் திமுக கூட்டணியில் வெற்றி மற்றும் தொகுதி நிலவரங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில், அனைவரும் தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கட்சி நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :












.jpeg)





