காதலியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்

by Staff / 13-01-2024 12:19:44pm
காதலியை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய காதலன்

விழுப்புரம் மாவட்டம், பெரும்புகை கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன். 30 வயதான இவர் 20 வயது இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அப்பெண்ணை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துக்கொண்டு, வீடியோவை காண்பித்து, தனக்கு தேவைப்படும் போதெல்லாம் மிரட்டி, அவரை பலாத்காரம் செய்திருக்கிறார். வெங்கடேசனின் இந்த நடவடிக்கைகளுக்கு அவரது அண்ணன் புருஷோத்தமன் (32), உறவினர் பூபாலன் (40), பூபாலன் மனைவி புஷ்பா (35) ஆகியோர் உடந்தையாக இருந்தாக சொல்லப்படுகிறது. போலீசில் அளித்த புகாரின் பேரில், அனைவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via