நீச்சல் குளத்தில் தவறி விழுந்து 5 வயது குழந்தை பலி

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்ணா-ஜமுனா தம்பதியினர் சென்னை ஈசிஆர் ரிசாட்டில் உள்ள வீட்டில் தோட்ட வேலை செய்து வருகின்றனர். வேலை செய்யும் வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர். இந்நிலையில், பெற்றோர் இருவரும் வேலை செய்த களைப்பில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில் அவர்களது 5 வயது ஆண் குழந்தை வெளியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த நீச்சல் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :