சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர். என். ரவி

by Staff / 15-04-2023 12:23:42pm
சிறப்பு ரயிலை துவக்கி வைத்தார் ஆளுநர் ஆர். என். ரவி

குஜராத் மாநிலத்தில் தமிழ்நாடு மற்றும் சௌராஷ்டிரா இடையேயான தொடர்பை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக்கூறும் வகையில் வரும் 17-ம் தேதி முதல் 26ம் தேதி வரை சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்காக மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் விராவல் நகருக்கு இயக்கப்படும் சிறப்பு ரயிலை, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் ஆர். என். ரவி கொடியைத்து துவக்கி வைத்தார்.இந்த சிறப்பு ரயிலானது, மதுரையில் இருந்து மாலை 5. 40 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 1. 30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைகிறது. ஏப்ரல் 14ம் தேதி மாலை 5. 40 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்ட இந்த ரயில், ஏப்ரல் 17ம் தேதி காலை 7. 30 மணிக்கு விராவல் ரயில் நிலையம் சென்றடைகிறது. இன்று முதல் 23ம் தேதி வரை மதுரையில் இருந்து புறப்படும் செளராஷ்டிரா தமிழ் சங்கமம் சிறப்பு ரயில் மட்டும் விராவல் ரயில் நிலையத்துக்கு காலை 9 மணிக்கு சென்றடையும்.இந்த ரயில் திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், தாம்பரம், சென்னை, ரேணிகுன்டா, கச்சிகுடா, நான்டெட், பூமா, அகோலா, ஜலகாவோன், நந்துர்பார், சூரத், வதோதரா, அகமதாபாத், சுரேந்திரநகர், ராஜ்கோட் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. மேலும் இதில் 6 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், 2 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டிகளும், 4 பொதுப்பெட்டிகளும், ஒரு மாற்றுத்திறனாளி பெட்டியும், ஒரு பார்சல் பெட்டியும் இணைக்கப்பட்டுள்ளது

 

Tags :

Share via