காவலாளியை காலணியால் தாக்கிய பெண்

by Staff / 14-03-2023 03:25:21pm
காவலாளியை காலணியால் தாக்கிய பெண்

கோவாவில் சுற்றுலா பயணிகளின் மிகவும் விருப்பத்துக்குரிய இடமாக கோவா இருந்து வருகிறது.  ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் வந்து செல்கின்றனர். பீச், மிதமான வெப்பநிலை, கலைநயம் மிகுந்த போர்ச்சுகீசிய கட்டிடங்கள் என பல்வேறு வகைகளில் கோவா சுற்றுலா பயணிகளை ஈர்த்து வருகிறது. ஆனால், சுற்றுலா பயணிகள்  அதிகம் வந்து செல்லும் கோவாவில் தற்போது குற்றச்செயல்கள் அதிகம் நடந்து வருகின்றன.கோவாவில் பழைய தேவாலயத்துக்கு வந்த சுற்றுலா பயணி அங்கிருந்த காவலாளியை தான் அனிந்திருந்த செருப்பால் தாக்கி உள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து அந்த பெண் சுற்றுலா பயணி மீது காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “தேவாலய வளாகத்துக்குள் நுழைவது தொடர்பாக காவலாளிக்கும் அந்த பெண்ணுக்கு வாக்குவாதம் ஏற்பட்டு பிறகு அந்த  பெண் செருப்பால் அவரை அடித்துள்ளதாக தெரிகிறது” என்று கூறினர்.

 

Tags :

Share via

More stories

Logo