உலகை காப்பாற்றிய நாசா

by Staff / 27-09-2022 03:55:38pm
உலகை காப்பாற்றிய நாசா

நமது பூமியை லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன. இவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என நாசா விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாசா DART எனும் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது. இதையடுத்து இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் இன்று அந்த விண்கலம் சிறுகோள் மீது வெற்றிகரமாக மோதியதால் அதன் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.

 

Tags :

Share via