சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள்நேரடியாக போரில் ஈடுபடாமல் விலகி இருக்க முடிவு.
மத்திய ஆசியாவில் நிலவும் போர் பதற்றத்தின் காரணமாக சவுதி அரேபியா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் நேரடியாக போரில் ஈடுபடாமல் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தங்கள் நாட்டில் உள்ள எண்ணெய் உள்கட்ட அமைப்புகள் மற்றும் பொருளாதார சொத்துக்களை பாதுகாப்பதில் இந்த நாடுகள் கவனம் செலுத்த உள்ளன. அமெரிக்கா இஸ்ரேல் படைகள் ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதற்கு பதிலாக ஈரான் நடத்திய ஏவுகரை தாக்குதல்களில் சவுதி அரேபியா இளவரசர் சுல்தான் விமான தளத்தில் இருந்து அமெரிக்காவின் ஐந்து எரிபொருள் நிரப்பும் விமானங்களும் சேதமடைந்தன .சவுதி அரேபியாவின் வான் பரப்பிற்குள் நுழைந்த 12த்திற்கு மேற்பட்ட ட்ரோன்களை அந்நாட்டு பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன. அதே சமயம் ரியாத்தில் உள்ள அமெரிக்கா தூதரகம் மீதும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. சவுதி அரேபியா உள்பட படம் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தனது தூதரகங்களை அமெரிக்கா மூடி உள்ளது. அத்துடன் அமெரிக்கர்கள் அங்கிருந்து வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Tags :



















