எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை

by Admin / 02-05-2026 04:50:30pm
 எட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி கோயம்புத்தூர் திருப்பூர் தேனி திண்டுக்கல் ஈரோடு சேலம் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் மணிக்கு நாற்பது முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் சென்னையைப் பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

 

Tags :

Share via
Logo