பட்டாசு தொழிலை பாதுகாத்து, பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
சிவகாசிக்கு மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் மற்றும் வாக்கு சேகரிக்கும் பிரச்சார கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசும்போது, எடப்பாடி பழனிச்சாமி, தனது ஆட்சிக்காலத்தில் பல நல்ல திட்டங்களை கொண்டு வந்துள்ளார். சிவகாசிக்கு, பல கோடி மதிப்பில் திட்டங்களை செயல்படுத்தி நிதி ஒதுக்கியவர் இ.பி.எஸ். குறிப்பாக பட்டாசு தொழிலை பாதுகாத்து, பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த உண்மைகளையெல்லாம் மக்களிடம் சொல்லி, நாம் எவ்வளவோ அடுக்கடுக்கான சாதனைகளை செய்துள்ளோம் அவற்றை மக்களிடம் சொல்லி வாக்கு சேகரித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம். சிவகாசி மட்டுமன்றி, அதிமுக அனைத்து மாநகராட்சி நகராட்சியிலும் வெற்றி பெற வேண்டும். இன்றைய நிலைமை மாறவேண்டும் என்றால் அதிமுகவிற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராகவே உள்ளனர். என்றார்.
Tags : பட்டாசு தொழிலுக்கு உயிர் கொடுத்தவர் எடப்பாடி பழனிச்சாமி.