மதுரையில் காங்கிரசாரின் சத்தியாகிரக போராட்டம்

by Staff / 26-03-2023 05:16:37pm
மதுரையில் காங்கிரசாரின் சத்தியாகிரக போராட்டம்

மதுரை காமராஜர் சாலை காந்தி பொட்டலில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் சத்யாகிரக போராட்டம் இன்று காலை தொடங்கியது. மாவட்ட தலைவர் கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் செய்யது பாபு, வர்த்தக அணி மாநில செயலாளர் நல்லமணி, மகளிரணி ஷா நவாஸ் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.அப்போது ராகுல் காந்தி பதவி பறிப்புக்கு நியாயம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டம் மாலை 5 மணி வரை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 

Tags :

Share via

More stories