ஒற்றை யானையை ஒண்டியாக நின்று வணங்கி பின்னோக்கி செல்ல வைத்த நபர்.

ஒகேனக்கல் வனப்பகுதியில் சுற்றித்திரிந்த காட்டு யானை ஒன்றை காட்டுக்குள் விரட்டுகிறேன் எனக்கூறி போதை ஆசாமி ஆபத்தான செயலில் ஈடுபட்ட சமபவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனப்பகுதியில் உள்ள சாலையில் யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. போதிய விழிப்புணர்வு செய்யப்படாத காரணத்தால், போதையில் இருந்த சுற்றுலாப் பயணி ஒருவர் வாகனங்களை சாலையோரம் நிறுத்திவிட்டு சாலையோரம் வந்த ஒற்றையானையை காட்டுக்குள் போகச்சொல்லி வணங்குவதும்,மண்ணைத்தொட்டுகும்பிடுவதுமாக இருந்துள்ளார்.இவரின் வேண்டுகோளையேற்று அந்தயானை பிளிறியபடி பின்னோக்கி சென்றக்காட்சியும் வெளியாகியுள்ளது.மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

Tags :