சர்வதேச அமைதி வாரியம் -காசா போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் உதவ இந்தியாவுக்கு அழைப்பு.

by Admin / 19-01-2026 01:35:28am
சர்வதேச அமைதி வாரியம்  -காசா போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் உதவ இந்தியாவுக்கு அழைப்பு.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காசா போரை நிறுத்துவதற்கான பேச்சு வார்த்தைகளில் உதவ இந்தியாவுக்கு அழைப்பு விடுத்ததாக தகவல். காசாவில் நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வரவும் மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டவும் ஒரு சர்வதேச அமைதி வாரியத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியுடன் தனக்குள்ள நட்புறவு மற்றும் சர்வதேச அளவில் இந்தியாவின் வளர்ந்து வரும் செல்வாக்கு காரணமாக இந்த பேச்சு வார்த்தையில் இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என்று ட்ரம்ப் விரும்புவதாக கூறப்படுகிறது. காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் ,பிணைய கைதிகள் விடுதலை மற்றும் போருக்கு பிந்திய காசாவில் மறு சீரமைப்பு ஆகியவற்றில் இந்தியாவின் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் அவரை எதிர்பார்ப்பதாக தெரிகிறது. இந்த அமைதி வாரியத்தை எதிர்ப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Tags :

Share via