கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் கைது

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி வேலை வாய்ப்பு நிறுவனம் நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருமங்கலத்தில் செயல்பட்டு வந்த c.m.s. நிறுவனங்களில் வேலைக்கு செல்வதற்கான பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தி அதன் மூலம் ஏராளமான நபர்களை மோசடி செய்துள்ளதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு ஏராளமான புகார்கள் வந்தன. இதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் கேரளாவைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் கோவிந்தராஜ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். விசாரணையில் சி எம் எஸ் நிறுவனம் மூலமாக கப்பலில் வேலைக்கு சேர்வதற்கான தொழில் பயிற்சிகள் வழங்கப்படும் என கூறி ஒருவருக்கு தலா 3 லட்ச ரூபாய் என பணத்தை வசூல் செய்து அவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்காமல் ஏமாற்றியது தெரிய வந்துள்ளது.
Tags :