தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று- வானிலை ஆய்வு மையம்

by Editor / 31-05-2024 09:54:30am
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று- வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சற்று குறைந்து, 1-2 டிகிரி செல்சியஸ் இயல்பை ஒட்டியும் இயல்பைவிட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். குமரிக்கடல், மன்னார்‌ வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

 

Tags : தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று .

Share via

More stories