Gpay, PhonePe-க்கு போட்டி.. ’ஜியோ நிறுவனம் களமிறக்குகிறது.
பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி குழுமமும் UPI சேவையில் களமிறங்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. பேடிஎம் செயலியை வாங்கும் முயற்சியை தொடந்து, அதானி-ஒன் செயலி மூலம், இதற்கான சேவைகள் விரைவில் தொடங்கும் எனவும், இதற்காக அதானி குழுமம் பல்வேறு வங்கிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அதானிக்கு முன்பாக, இதே துறையில் முன்னிலை வகிக்கும் விதமாக, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனம், தனது புதிய மொபைல் செயலியான ’ஜியோ ஃபைனான்ஸ் ஆப்’ (Jio Finance App)-ன் பீட்டா வெர்ஷனை வெளியிட்டுள்ளது. டிஜிட்டல் வங்கிச் சேவைகள், யுபிஐ பரிவர்த்தனைகள், பில் கட்டணங்கள், இன்சூரன்ஸ் ஆலோசனை மற்றும் சேமிப்புக் கணக்குகள் ஆகியவற்றை இந்த ஜியோ செயலி வழங்க உள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளுக்கு மாற்றாக புதிய செயலியை அம்பானி நிறுவனம் களமிறக்குகிறது.
Tags : Gpay, PhonePe-க்கு போட்டி.. ’ஜியோ நிறுவனம் களமிறக்குகிறது.